இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார் பிரியர்களின் விருப்பத்துக்கேற்ற வகையில், டாடாவின் சியரா கார் எலக்ட்ரிக்கில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தைக் கொண்டுள்ள டாடா நிறுவனம், நீண்ட காலமாகவே கார் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வருகிறது.
டாடாவின் தயாரிப்பில் சமீபத்தில் டாடா சியரா கார் வெளியாகி குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்தாண்டு நவம்பரில் அறிமுகமான இந்த காரின் விலை ரூ. 11.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த காரின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியான நான்கு மாதங்களில் 20,000 கார்கள் வரை விற்பனை ஆகியுள்ள நிலையில், டாடா ஹாரியர், டாடா கர்வ்க்கு இடையிலான இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா சியரா.
அதேபோல, மாருதி இ விட்டாரா, மஹிந்திரா பிஇ6 உள்ளிட்ட கார்களுக்குப் போட்டியாகவும் களத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய டாடா சியரா மாடலில் இருக்கும், 360 டிகிரி கேமரா, சன்ரூஃப், 12 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவைகள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும், சுமார் 55 கிலோவாட் ஹவர் மற்றும் 65 கிலோவாட் ஹவர் அளவிலான இரண்டு பேட்டரிகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மஹிந்திரா பிஇ6 போன்ற கார்களில் அதிக பேட்டரி திறன்களை வழங்குவதால், ஹாரியர் இவியில் வழங்கப்பட்டுள்ள 75 கிலோவாட் ஹவர் பேட்டரிகூட வழங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Summary
Tata Motors is preparing to expand its electric vehicle lineup with the much-anticipated Sierra.ev, which is expected to go on sale in May 2026. The electric SUV will arrive a few months after the launch of its ICE counterpart, which has already crossed 20,000 units in sales within around four months. Here’s a quick look at what we can expect from the model.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஐடி பல்கலை., டாடா மோட்டாா்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!

தனுஷுக்கு ஜோடியாகும் சாரா அர்ஜுன்?

வின்பாஸ்ட்டின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

