ஈரானுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த 35 நாள்களுக்கும் மேலாக மேற்காசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வந்த அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தம் செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய நேரப்படி புதன்கிழமை காலை அறிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு இந்திய பங்குச்சந்தைகளில் காலையிலேயே எதிரொலித்தது. காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியது அனைத்துப் பங்குகளும் நல்ல லாபத்தை ஈட்டின.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே அதிரடியாக 2,600 புள்ளிகள் உயர்ந்தது. அதேபோன்று, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் அதிரடியாக 750 புள்ளிகள் உயர்ந்தது.
காலை 9.40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2,665 புள்ளிகள்(3.60 சதவிகிதம்) உயர்ந்து 77,281.77 புள்ளிகளுடன், நிஃப்டி 783.75 புள்ளிகள் உயர்ந்து, தற்போது 23,907.40-ல் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி50-ல் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் இஸ்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, பாரதி ஏர்டெல், எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எஸ்பிஐ, டிசிஎஸ், இஸ்ஃபோசிஸ், பஜாஜ் பைனான்ஸ், எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்சிஎல், ஆக்ஸிஸ் வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட், அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசர்ஸ், இண்டெர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 3 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வரை உயர்ந்தன.
Summary
Both Sensex and Nifty opened negative on Tuesday after US, Iran failed to reach a ceasefire agreement. Iran turned down a US proposal for a ceasefire, instead sending back a ten-point response that calls for a permanent end to the war.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்லும் அமெரிக்க குழுவில் துணை அதிபர் இடம்பெறவில்லை!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

