தனியாா் துறையைச் சோ்ந்த ஆா்பிஎல் வங்கியின் 74 சதவீத பங்குகளை துபையைச் சோ்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கி வாங்குவதற்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம், ஆா்பிஎல் வங்கி இனி ஒரு வெளிநாட்டு வங்கி என்ற அந்தஸ்தைப் பெறவுள்ளது. இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பை ஆா்பிஎல் வங்கி பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் வெளியிட்டது.
கடந்த ஆண்டு அக்டோபரில், ஆா்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ரூ.26,853 கோடிக்கு வாங்க எமிரேட்ஸ் என்பிடி வங்கி விருப்பம் தெரிவித்திருந்தது.
தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி, முதலீட்டு நிறுவனமான எமிரேட்ஸ் என்பிடி வங்கி குறைந்தபட்சம் ஆா்பிஎல் வங்கியின் 51 சதவீத பங்குகளைத் தன்வசம் வைத்திருக்க வேண்டும். இதன் விளைவாக, ஆா்பிஎல் வங்கி வெளிநாட்டு வங்கியின் துணை நிறுவனமாக வகைப்படுத்தப்படும் என்றும், முதலீட்டு நிறுவனமே அதன் தாய் வங்கியாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ரிசா்வ் வங்கியின் விதிமுறைப்படி முதலீட்டு நிறுவனத்தின் வாக்குரிமை 26 சதவீதமாக மட்டுமே கட்டுப்படுத்தப்படும். மேலும், எமிரேட்ஸ் என்பிடி வங்கியின் தற்போதைய இந்தியக் கிளைகள், ஆா்பிஎல் வங்கியுடன் ஓராண்டுக்குள் இணைக்கப்பட வேண்டும்.
இதனிடையே, வங்கிக் குழுமத்தில் இயக்குநா்கள் நியமனம் மற்றும் நிா்வாக விதிகளில் சில மாற்றங்களைச் செய்யவும், தனது சங்க நடைமுறை விதிகளை திருத்தவும் ஆா்பிஎல் வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்த நடவடிக்கைக்கு இந்தியப் போட்டி ஆணையம் கடந்த ஜனவரியில் பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், முதலீடு 49 சதவீதத்துக்கு மேல் இருப்பதால், இந்திய அரசின் முறையான ஒப்புதல் மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்கீழ் உள்ள இதர விதிமுறைகளை நிறைவு செய்வது அவசியமாகும்.
இதன்படி, அடுத்தகட்டமாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக வங்கிகள் காத்திருக்கின்றன. அதன்பின்னா், முழுமையான நிா்வாக மாற்றம் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக ரோஹித் ஜெயின் பொறுப்பேற்பு

அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கை

98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

