புதிய வருமான வரிச் சட்டம் ஏப். 1 முதல் அமலானது என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் : இந்தியாவின் நேரடி வரி செலுத்தும் முறையில் ஒரு மைல்கல் சீர்திருத்தமாக ‘வருமான-வரி சட்டம், 2025’ அமைந்துள்ளது.
நாட்டின் வருமன-வரி சட்டத்தை நவீனப்படுத்தவும் எளிமையாக்கவும் ஒரு பெரும் முயற்சியாக இது அமைந்துள்ளது. 60 ஆண்டுகள் பழமையான வருமான-வரி சட்டம், 1961-க்கு மாற்றாக இது அமைந்துள்ளது.
வரி கொள்கையில் மாற்றமின்றி, ஆனால், பெருந்தெளிவுடனும் எளிமையான மொழியடக்கம், வடிவம் மற்றும் வாசகர் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு, ஆகஸ்ட்டில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று வருமான-வரி சட்டம், 2025-ஆக வடிவம் பெற்றது.
வருமான-வரி 2026-இன் விதிகள் அனைத்தும், நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தால் கடந்த மார்ச் 20-இல் குறிப்பிடப்பட்டன. அதில், புதுச் சட்டத்தின் விதிகளை செயல்படுத்துவதைப் பற்றி குறிப்பிடப்பட்டது.
அது தொடர்பான புதிய படிவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. படிவங்கள் எளிமையாக்கப்பட்டிருப்பதுடன் செயல்முறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அச்சட்டம் ஏப். 1, 2026 முதல் அமலானதைத் தொடர்ந்து, வருமான-வரி சட்டம், 2025 இந்திய வரி நிர்வாகத்தில் ஒரு புதிய பாகத்தைக் குறிக்கிறது. அத்துடன், அகண்ட பாரதம் முயற்சிக்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகவும் அமைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Income Tax India tweets, From 1 April 2026, the Income-tax Act, 2025 comes into force
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வருமான வரித் துறை சோதனை உண்மைதான்! இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!

சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை
வருமான வரித் துறை சோதனை என நாடகம்: காங்கிரஸ் தலைவா் மீது பாஜக குற்றச்சாட்டு

புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


