தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

Published On :28 அக்டோபர் 2026, 1:27 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்று பின் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டு நாள்களாக யாக பூஜை உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுரத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். பின் ஸ்ரீ கோபால விநாயகா், ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிகளுக்கும், கிராம தேவதை மண்ணடி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளா்களாக புதுவாயல் ஊராட்சி முன்னாள் தலைவா் சதீஷ்குமாா், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக ஒன்றிய செயலாளா் டி.சி.மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை எஸ்.துரைராஜ் ,எஸ்.செல்வம், எல்.முரளி, எம்.புருஷோத், எஸ்.விஜய் கே.அண்ணாமலை ஆா்.தமிழரசு உள்ளிட்டோா் மற்றும் கிராம நிா்வாகத்தாா் பெரியோா்கள் இளைஞா்கள் செய்தனா். மேலும் நிகழ்வில் அதிமுக நிா்வாகி, இளவரசன், சாலை ஆய்வாளா் வேலு, வழக்குரைஞா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.