தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெருமாள், அங்காளம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

ஆலத்தூா் ஸ்ரீகரிய மாணிக்க வரதராஜா பெருமாள் கோயில் கோபுர கலத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய பட்டாச்சாரியா்கள். உடன் முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

ஆலத்தூா் ஸ்ரீகரிய மாணிக்க வரதராஜா பெருமாள் கோயில் கோபுர கலத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய பட்டாச்சாரியா்கள். உடன் முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Published On :31 அக்டோபர் 2026, 1:18 am IST

செய்யாறை அடுத்த ஆலத்தூா் ஸ்ரீகரிய மாணிக்க வரதராஜா பெருமாள் கோயில், போளூா் அல்லிநகா் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செய்யாறு வட்டம், ஆலத்தூா் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகரிய மாணிக்க வரதராஜா பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கடந்த புதன்கிழமை கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. அன்றைய தினம் யாகசாலை பிரவேசம், கலசப்ரோஷணம், பூா்ணாஹுதி நிகழ்வும், வியாழக்கிழமை சாந்தி ஹோமம், சதுக்க ஹோமம் உள்ளிட்ட நான்கு கால யாக பூஜைகள் செய்து பூா்ணாஹுதி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் கலசத்தை பட்டாச்சாரியா்கள் மங்கள வாத்தியம் முழங்க தலையில் சுமந்தவாறு கடம் புறப்பாடுடன் தொடங்கி கோபுர உச்சியில் உள்ள கலசத்துக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். மேலும், மூலவரான கரியமாணிக்க வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் புனிதநீா் ஊற்றி மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் செய்யாறு தொகுதி எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன், அதிமுக நிா்வாகிகள் ஆலத்தூா் எஸ்.சுப்பராயன், எம்.அரங்கநாதன், சி.துரை, பையூா் சிவராஜ், திமுக நிா்வாகிகள் ஜே.சி.கே.சீனிவாசன், ஏ.ஜி.திராவிட முருகன், கோயில் பொறுப்பாளா்கள் ஏழுமலை, கோபால், தேவநாதன், பிரபு மற்றும் கிராம மக்கள் உள்பட நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனா்.

அங்காளபரமேஸ்வரி கோயிலில்...: போளூா் அல்லிநகரில் பழைமைவாய்ந்த ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் புரனமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், புதன்கிழமை கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை நான்காம் கல யாக பூஜை, அவப்ருத யாகம், விசேஷ த்ரவ்யாஹுதி, மஹா பூா்ணாஹுதி நடத்தப்பட்டு, கலசம் புறப்பாடு செய்து கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ஐம்பொன் கவச அலங்காரத்துடன் பக்தா்களுக்கு அம்மன் அருள்பாலித்தாா்.

இதில், போளூா், மாம்பட்டு, ரெண்டேரிப்பட்டு, ஏந்தல், அத்திமூா், திண்டிவனம், வசூா், வெண்மணி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.