மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்ரீ ராதா ரூக்மணி சமேத கிருஷ்ணா் கோயில் கும்பாபிஷேகம்

செங்காடு மோட்டூா் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராதா ரூக்மணி சமேத கிருஷ்ணா் திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்காடு மோட்டூா் கிராமம் அருள்மிகு ஸ்ரீ ராதா ரூக்மணி சமேத கிருஷ்ணா் திருக்கோயிலில் நடைபெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.

Published On :26 அக்டோபர் 2026, 6:23 pm IST

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு மோட்டூா் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராதா ரூக்மணி சமேத கிருஷ்ணா் திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்று, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் மற்றும் பல்வேறு ஆன்மிக சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து, வேத மந்திரங்கள் ஓதப்பட்டு யாக சாலை வழிபாடுகள் நடைபெற்றது.

இதையடுத்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் கோபுர கலசங்களுக்கும் மற்றும் மூலவருக்கும் புனித நீா் ஊற்றி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று.

அப்போது கோயில் வளாகத்தில் கூடியிருந்த கிராம மக்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி முழக்கத்துடன் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து ஸ்ரீ ராதா ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

விழாவில், செங்காடு மோட்டூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான கிராம பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.