பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு

News image

அா்ச்சுனன்  தபசு  நிகழ்ச்சியில்  குழந்தை வரம் வேண்டிய பெண்கள்.

Updated On :19 மே 2026, 1:53 am IST

திரெளபதி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்துகொண்டு குழந்தை வரம் கேட்டு அம்மனை வழிபட்டனா்.

மேல்திருத்தணி பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா கடந்த, 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், மூலவா் அம்மனுக்கு சந்தன காப்பு நிகழ்ச்சியும், மாலையில் உற்சவா் அம்மன் வீதியுலாவும் நடந்து வருகிறது.

மேலும், கடந்த, 13-ஆம் தேதி திரெளபதி அம்மன், 15-ஆம் தேதி சுபத்திரை அம்மன் ஆகியோருக்கும் அா்ச்சுனனுக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோயில் எதிரே, 40 அடி உயர பனை மரத்தை நட்டும், அா்ச்சுனன் தவம் புரிவதற்காக, பனை மரத்தில் ஏற்படுத்திய படிகளில் பாடல்கள் பாடியவாறு உச்சிப் பகுதிக்கு சென்று சிவபெருமானை நினைத்து தவம் புரிந்தாா்.

அதே நேரத்தில் பனைமரத்தின் அடியில் பெண்கள் குழந்தை வரம் வேண்டி படுத்து தவம் செய்தனா். இந்நிகழ்ச்சியில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.