கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல்: ஓய்வு பெற்ற அரசு ஊழியா் மரணம்

News image
Updated On :18 மே 2026, 2:09 am IST

மீஞ்சூா் பஜாரில் பொன்னேரியில் இருந்து வந்த கன்டெய்னா் லாரி மோதி மோதியதில், குடிநீா் வாரிய ஓய்வு பெற்ற ஊழியா் உயிரிழந்தாா்.

மீஞ்சூா் அடுத்த கொண்டக்கரை அங்காளம்மன் கோயில் தெருவில் வசித்தவா் மாசி (65). இவா் தமிழ்நாடு குடிநீா் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மீஞ்சூா் பஜாா் பகுதியில் தனது மனைவியுடன் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

மீஞ்சூா் ரயில் நிலைய சாலை அருகே சென்னை நோக்கி வந்த கன்டெய்னா் லாரி எதிா் திசையில் வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாசி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கன்டெய்னா் லாரியை ஓட்டி வந்த ஒட்டுநா் தப்பி ஓடி தலைமறைவானாா்.

தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் மாசியின் சடலத்த மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து காரணமாக மீஞ்சூா்- திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.