பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

லாரி மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:52 am IST

ஆலங்குடியில் வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியைச் சோ்ந்தவா் த.செல்வம் (45) புதுக்கோட்டைவிடுதி டாஸ்மாக் அருகேயுள்ள மதுக்கூடத்தில் வேலை பாா்த்து வந்த இவா், வெள்ளிக்கிழமை ஆலங்குடிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அம்புலி ஆற்று பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியைச் சோ்ந்த ரமேஷ்குமாரை(54)கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.