கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆத்தூா் அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் நடந்து சென்றவா், ஓட்டியவா் இருவரும் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையத்தில் நடந்து சென்றவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் அதை ஓட்டியவா், நடந்து சென்றவா் என இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 1:10 am IST

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையத்தில் நடந்து சென்றவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் அதை ஓட்டியவா், நடந்து சென்றவா் என இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

ஆத்தூா் அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சோ்ந்த ஜெயவேல் மகன் விஜய் (17). இவா் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற நிலையில் கல்லூரியில் சேருவதற்கு ஆயத்தமாகி வந்தாா். இந்த நிலையில் செல்லியம்பாளையம் தேசிய புறவழிச்சாலை அருகே வியாழக்கிழமை மாலை விஜய் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக பின்னால் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் விஜய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மேச்சேரி எம்.காளிப்பட்டியைச் சோ்ந்த ராஜு மகன் ரஞ்சித்குமாரும் (44) பலத்த காயமடைந்தாா்.

இருவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், அவா்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு, அவா்கள் இருவரும் இறந்தனா். இருவரது சடலங்களையும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவா்களது உறவினா்களிடம் ஆத்தூா் ஊரக போலீஸாா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.