திருவள்ளூா் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தெருவோர கடைகளை போலீஸாா் பாதுகாப்புடன் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
வாகன போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள், கட்டடங்கள் உள்ளதாகவும், அதை அகற்றவும் ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் பாலாஜி மற்றும் நகராட்சி ஆணையாளா் தாமோதரன் ஆகியோா் முன்னிலையில் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் இடித்து அகற்றினா்.
ஜே.என்.சாலை, ஜி.டி.என்.சாலை, குளக்கரை வீதி ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்திற்கு இடையூராக ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தவா்கள், கட்டடம் ஆகியவைகளை பொக்லைன் வாகன உதவியுடன் இடித்து அகற்றினா். அப்போது, இதேபோல் இனிமேல் எக்காரணம் கொண்டும் ஆக்கிரமித்து கடைகள் வைக்க கூடாது, பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டக்கூடாது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனா். ,
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல்லில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

காக்களூா் சிவன் கோயில் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நீதிமன்ற உத்தரவு: விழுப்புரத்தில் அம்மன் கோயில்அகற்றம்

திருப்பூா் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

