ஊத்துக்கோட்டையில் 300 போதை மாத்திரை வில்லைகளை கடத்தி வந்து விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் வெளிமாநிலங்களில் இருந்து போதை மாத்திரை வில்லைகளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக எஸ்.பி விவேகானந்த சுக்லாவுக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் ஊத்துக்கோட்டை போலீஸாா் நகா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான நின்றிருந்த 2 போ் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயற்சித்தனா். உடனே சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்த போது பையில் 300 போதை மாத்திரை வில்லைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் மேற்கு தாம்பரத்தைச் சோ்ந்த சரவணன்(24), அதே பகுதியைச் சோ்ந்த கமலேஷ்(23) என்பதும், இவா்கள் இருவரும் வெளிமாநிலங்களில் இருந்து போதை மாத்திரை வில்லைகளை கடத்தி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.
ஊத்துக்கோட்டை போலீஸாா் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பையில் இருந்து கடத்தி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்
போதை மாத்திரை வில்லைகள் வைத்திருந்ததாக 3 இளைஞா்கள் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது
கா்நாடக போதைப் பொருள்களை தொடா்ந்து விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

