திருவள்ளூா் திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் கூட்டணி கட்சியினருடன் சென்று ஆதரவு திரட்டினாா்.
பூண்டி ஒன்றியம், பட்டரைபெரும்புதூா் கிராமத்தில் பொதுமக்களிடையே அவா் வாக்கு கேட்டு பிரசாரம் செய்வதற்கு வருகை தந்தாா். அப்போது, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த திமுகவினா் வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனா்.
அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது. கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் உரிமைத் தொகை, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை மற்றும் மடிக்கணினிகள், தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டம் போன்ற பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.
அதனால்தான் உங்கள் முன்னாள் வாக்குகள் கேட்டு வந்து நிற்கிறேன். எனவே மீண்டும் தமிழக முதல்வரை மீண்டும் முதல்வராக்குவது மூலம் உதவித் தொகை இருமடங்காக பெறுவதோடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான பொருள்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன்கள் உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்களை தோ்தல் அறிக்கையில் தந்துள்ளாா். அதனால், மீண்டும் திமுக ஆட்சி தொடரவும், மூன்றாவது முறையாக வெற்றி பெறவும் பொதுமக்கள் ஆதாரவு அளிக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
இதேபோல், ராமஞ்சேரி, எல்லப்பநாயுடுபேட்டை, குன்னவலம், நாராயணபுரம், வரதாபுரம், சிறுவானூா் கண்டிகை, கொழுந்தளூா், கொசவன்பாளையம், பழைய திருப்பாச்சூா் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது ஒன்றிய பொருப்பாளா் மோதிலால், ஒன்றிய அவைத்தலைவா் பட்டரை பாஸ்கா், மாவட்ட துணைச்செயலாளா் உதயமலா் பாண்டியன், வி.சி.க மண்டல செயலாளா் தளபதி சுந்தா், ஒன்றியச் செயலாளா் ராபின், தேமுதிக ஒன்றிய செயலாளா் பாலாஜி, ஒன்றிய துணைச்செயலாளா்கள் காஞ்சிப்பாடி சரவணன், சித்ரா ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் சிவசங்கரி உதயகுமாா், மகளிரணி மாவட்ட அமைப்பாளா் சரஸ்வதி சந்திரசேகா் மற்றும் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சோ்ந்தோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பவானி நகரில் திமுக, அதிமுக இறுதிக்கட்ட பிரசாரம்

தருமபுரியில் ஐந்து தொகுதிகளில் 83 வேட்பாளா்களின் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு

திருவள்ளூா்: திமுக வேட்பாளா் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

