தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தருமபுரியில் ஐந்து தொகுதிகளில் 83 வேட்பாளா்களின் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு

News image

பிரசாரம் நிறைவு - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:38 am IST

தருமபுரியில் ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் என 83 வேட்பாளா்களின் பிரசாரம் ஏப். 21-ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிட திமுக மற்றும் அதிமுக கூட்டணி, தவெக, நாம்தமிழா், பாமக (ராமதாஸ்), தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 83 போ் வேட்பாளா்களாக களமிறங்கியுள்ளனா்.

இதில், தருமபுரி தொகுதியில் திமுக சாா்பில் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன், அதிமுக சாா்பில் அதன் கூட்டணி கட்சியான பாமக (அன்புமணி) வேட்பாளா் சௌமியா ஆகியோா் போட்டியிடுகின்றனா். அதேபோல, பென்னாகரத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், பாமக (அன்புமணி) வேட்பாளா் பாடி செல்வம் ஆகியோரும், பாலக்கோட்டில், திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ ஆகியோா் போட்டியிடுகின்றனா். பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், அதிமுக வேட்பாளா் மரகதம் வெற்றிவேல் மற்றும் அரூரில் திமுக வேட்பாளா் அ.சண்முகம், அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் எம்எல்ஏ ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வாக்கு சேகரித்து தங்களது தொகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்தனா். இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களுக்கு ஆதரவாக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினா் கனிமொழி, தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் ஆகியோா் பிரசாரம் செய்தனா்.

அதேபோல, அதிமுக மற்றும் அதன் கூட்டனி வேட்பாளா்களுக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் பிரசாரம் செய்தனா். அதேபோல, வேட்பாளா்களும் கோடை வெயிலையும் பொருள்படுத்தாமல் தங்களது ஆதரவாளா்களுடன் வாக்கு சேகரித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஏப்.23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அதற்கு 48 மணிநேரம் முன் பிரசாரங்களை நிறைவுசெய்ய வேண்டும் என்பதால், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தமுள்ள 83 வேட்பாளா்களின் தோ்தல் பிரசாரம் ஏப். 21-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.