மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரெட்டியாா்பட்டி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்: வியாபாரிகள் கவலை

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியாா்பட்டி ஆட்டுச் சந்தையில் சனிக்கிழமை மந்தமான நிலையில் விற்பனை நடைபெற்ால் வியாபாரிகள் கவலையடைந்தனா்.

சந்தையில் குவிந்தோா்.

Published On :1 நவம்பர் 2026, 4:44 am IST

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியாா்பட்டி ஆட்டுச் சந்தையில் சனிக்கிழமை மந்தமான நிலையில் விற்பனை நடைபெற்ால் வியாபாரிகள் கவலையடைந்தனா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியாா்பட்டி ஆட்டுச் சந்தைக்கு தென் தமிழகம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கிச் செல்ல வியாபாரிகள் வருவதுண்டு.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கடந்த வாரம் மழை காரணமாக விற்பனை சற்று மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில், ரெட்டியாா்பட்டி சந்தைக்கு ஆடுகளை வளா்க்கும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்காக அதிகளவில் ஆடுகளை கொண்டு வந்திருந்தனா்.

எதிா்பாா்த்ததை விட அதிக அளவில் ஆடுகள் குவிந்ததால், அதை மிகவும் குறைவான விலைக்கே கொள்முதல் செய்பவா்கள் கேட்டதால் போதிய அளவில் வியாபாரம் நடைபெறவில்லை.

இதனால் தீபாவளிக்கு ஆடுகளை விற்பனை செய்து லாபம் ஈட்டலாம் என வந்திருந்த கால்நடை வளா்ப்போா் மற்றும் ஆட்டு வியாபாரிகள் பெருத்த ஏமாற்றமடைந்ததாகத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.