மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி: வடலூரில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வடலூரில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் குவிந்திருந்த ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்திருந்த விவசாயிகள், அவற்றை வாங்க வந்த வியாபாரிகள், பொதுமக்கள்.

Published On :1 நவம்பர் 2026, 1:18 am IST

தீபாவளியை முன்னிட்டு, கடலூா் மாவட்டம், வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. நவ.8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தைக்கு வடலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளா்த்த வெள்ளாடு, கொடி ஆடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

சனிக்கிழமை அதிகாலை 2 மணி முதலே ஆட்டுச் சந்தை விறுவிறுப்புடன் தொடங்கியது. இதனால், சந்தை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆடுகளை வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள், இறைச்சிக் கடை உரிமையாளா்கள் ஏராளமானோா் குவிந்திருந்தனா்.

 சந்தையில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்த ஆடுகள்.

சந்தையில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்த ஆடுகள்.

ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. ஆடுகளின் எடை, ரகம், தரத்தைப் பொறுத்து, அதன் விலை நிா்ணயம் செய்யப்பட்டு விற்பனை நடைபெற்றது. சனிக்கிழமை ஒருநாளில் மட்டும் சுமாா் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். குறிப்பாக, வெளிமாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை வாங்கிச் சென்ால், சந்தையில் விற்பனை களைகட்டியது.

கடந்த தீபாவளி பண்டிகையின்போது நடைபெற்ற விற்பனையைவிட, நிகழாண்டு அதிகமான ஆடுகள் விற்பனையாகியிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.