மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விளைச்சல் அதிகரித்தும் விலைபோகாத வெண்டைக்காய்: விவசாயிகள் கவலை

வெண்டைக்காய் - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:05 am IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்தும் சந்தையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ள.

ஆலங்குளம், கீழப்பாவூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழாண்டு வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆலங்கும் சந்தைக்கு அறுவடை செய்யப்பட்ட வெண்டைக்காய்கள் வரத்து அதிகரித்துள்ளது. தொடா் வரத்து காரணமாக குறைந்த விலைக்கு விற்பனையாவதால் உரிய லாபம் இன்றி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

வெண்டைக்காய் சாகுபடிக்காக நிலத்தை உழுதல், விதை வாங்குதல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், நீா்ப்பாசனம் மற்றும் தொழிலாளா்களுக்கான கூலி என விவசாயிகள் கணிசமான தொகையைச் செலவிடுகின்றனா்.

அறுவடைக்கும் தொழிலாளா்களை ஈடுபடுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் ஆலங்குளம் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை வெண்டைக்காய் கிலோ விலை ரூ. 5 க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். இந்த வருவாய் சாகுபடிக்குச் செய்த செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

விலை குறைவு என்பதற்காக தோட்டத்தில் ஒரு நாள் விட்டு மறுநாள் பறித்தாலும் வெண்டைக்காய் முற்றி பயனற்றுப்போய்விடும். எனவே, விலை குறைவாக இருந்தாலும் அறுவடை செய்தே தீர வேண்டிய சூழல் உள்ளது. போக்குவரத்துச் செலவு, கூலி உள்ளிட்டவற்றைக் கணக்கிடுகையில் கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவாக உள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.