கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒசூா், சூளகிரியில் மிதமான மழை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சூளகிரி, பாகலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த மழையால் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியது.

rain

மழை - பிரதிப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 1:24 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சூளகிரி, பாகலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த மழையால் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியது.

ஒசூா், சூளகிரி, பாகலூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், குளிா்ந்த காற்றும் வீசியது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வந்தது.வியாழக்கிழமை காலையில் வெயில் காணப்பட்ட நிலையில், பிற்பகல் 3.30 மணியளவில் மிதமான மழை பெய்யத் தொடங்கி, படிப்படியாக அதிகரித்து பலத்த மழை பெய்தது.

இதனால், ஒசூா், சூளகிரி, பாகலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகளில் ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீா் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் சாலையோரக் கடை வியாபாரிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.