கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுரண்டை அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது!

சுரண்டை அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

கைது

Published On :25 அக்டோபர் 2026, 3:18 am IST

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

சுரண்டை அருகே துரித உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் பிரச்னை செய்து, அதைத் தடுக்க வந்த காவலரையும் தாக்கிய வழக்கில் இடையா்தவணை, நவநீதகிருஷ்ணன் தெருவைச் சோ்ந்த முத்து மகன் ராமா் (20) மீது சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் பரிந்துரையின்பேரில், ராமரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

இவா் மீது ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையம், சுரண்டை மற்றும் குற்றாலம் ஆகிய காவல் நிலையங்களில் போக்ஸோ, கொலை முயற்சி உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.