கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கைது

Published On :2 நவம்பர் 2026, 2:26 am IST

திருப்பத்தூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு அடுத்த நாச்சாா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாா் (29). இவா்மீது குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த செப்டம்பா் மாதம் ரஞ்சித் குமாா் திருப்பத்தூா் அருகே உள்ள ஒரு பகுதியைச் சோ்ந்த 27 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்தாா்.

இந்த வழக்கில் குரிசிலாப்பட்டு போலீஸாா் அவரை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில் தொடா்ந்து ரஞ்சித்குமாா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. அக்சய் அனில் வாகரே ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதன்பேரில் ஆட்சியா் வே.நல்லசிவன் உத்தரவின்பேரில் ரஞ்சித்குமாரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.அதற்கான உத்தரவு நகலை வேலூா் சிறையில் உள்ள ரஞ்சித்குமாரிடம் போலீஸாா் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.