விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தென்காசி மாவட்டத்தில் ரூ. 61.43 லட்சம் ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :24 மார்ச் 2026, 2:01 am IST

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு திங்கள்கிழமை வரை ரூ. 61,43,240 மதிப்பிலான ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் 8 மணி நேரத்திற்கு 3 குழுக்கள் வீதம் ஒரு தொகுதிக்கு 9 குழுக்கள் என 5 பேரவைத் தொகுதிக்கு 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் ரூ. 14,16,360, கடையநல்லூா் தொகுதியில் ரூ. 4,63,300, ரூ. 8,35,250 மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், சங்கரன்கோவில் தொகுதியில் ரூ. 7,31,900, தென்காசி தொகுதியில் ரூ. 9,71,900, வாசுதேவநல்லூா் தொகுதியில் ரூ. 15,19,020 என மொத்தம் ரூ. 61,43,240 மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.