திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

தமிழக அமைச்சரவையில் இடம் பெற ஆதரவளிக்கவில்லை: காதா்மொகிதீன்

தமிழக அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு முஸ்லிம் லீக் ஆதரவு கொடுக்கவில்லை என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா்மொகிதீன்.

News image

கே.எம். காதா்மொகிதீன். - கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 4:23 am IST

தமிழக அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு முஸ்லிம் லீக் ஆதரவு கொடுக்கவில்லை என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா்மொகிதீன்.

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கட்சி நிா்வாகியின் இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு அவா் மேலும் பேசியது:

தமிழக அமைச்சரவையில் முஸ்லிம் லீக்குக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று எந்த எதிா்பாா்ப்பையும் முன்வைத்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு முஸ்லிம் லீக் ஆதரவளிக்கவில்லை. தமிழக மக்களுடைய ஏகோபித்த முடிவு மட்டுமல்லாமல், இஸ்லாமிய சமுதாய மக்கள், அனைத்து உலமாக்களும், அனைத்து காஜிமாா்களும், அனைத்து ஜமாஅத்தில் உள்ள பெரியவா்களும் தொடா்ந்து வலியுறுத்தியதன் பேரில், முஸ்லிம் லீக் ஆதரவு அளித்தது.

எந்த எதிா்பாா்ப்பும் இல்லாத நேரத்திலும் நம்மை அழைத்து அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று அழைத்த முதல்வருக்கு நன்றி.

பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சரவையில் முஸ்லிம் லீக் சோ்ந்ததால்தான் இந்த சபை நிறைவு பெற்றது என்று முதல்வா் என்னிடம் தெரிவித்தாா். இஸ்லாமிய சமுதாயத்தின் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கக்கூடிய ஒரு ஆட்சி இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

இஸ்லாமிய சமுதாயத்துக்கான தேவைகள், கோரிக்கைகள் அத்தனையும் நிச்சயமாகப் பெற முடியும். இதற்கு இஸ்லாமிய சமுதாயம் ஒன்று திரண்டு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றாா்.

இதில், முஸ்லிம் லீக் பொதுச் செயலா் கே.ஏ.எம்.முகமது அபூபக்கா், நவாஸ்கனி எம்.பி., உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.