மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரி கடற்கரையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி!

சர்வதேச கடற்கரை தூய்மை நாளையொட்டி புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி பற்றி....

Helicopter stunt show at Puducherry beach!

புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி.

Published On :19 செப்டம்பர் 2026, 4:00 pm IST

சர்வதேச கடற்கரை தூய்மை நாளையொட்டி புதுச்சேரி கடற்கரையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து கடலோர காவல் படையினரின் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சர்வதேச கடற்கரை தூய்மை நாளையொட்டி, இந்திய கடலோர காவல் படை சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே கடற்கரை தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு தூய்மைப் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத் சௌஹான், இந்திய கடலோர காவல் படை இயக்குனர் தசீலா, செயலர் ஸ்மிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கடலோர காவல்படையினரின் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியும் நடுக்கடலில் நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 2026-ஆம் ஆண்டுக்கான நாடு தழுவிய கடற்கரை தூய்மை இயக்கம் செப்டம்பர் 12 முதல் 19 வரை நடைபெறுவதாக மத்திய அரசின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Regarding the helicopter aerobatics display held at Puducherry beach on International Coastal Cleanup Day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.