மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கலையரசன் கைது விவகாரம்! அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

பேராசிரியர் கலையரசன் கைது விவகாரத்தில் அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியது குறித்து...

MK Stalin | Kalaiarasan

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் கலையரசன் - X | MK Stalin

Published On :31 அக்டோபர் 2026, 4:56 pm IST

பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி.

விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக்கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு. விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது கருத்துகளால்; காவல்துறை நடவடிக்கைகளால் அல்ல.

போலி சமூக ஊடகக் கணக்குகளின் கருத்துகளைக் காரணமாகச் சொல்லி, அதிகாலையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேராசிரியர் கலையரசன், தமக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வெளிவந்திருப்பதற்கு எனது வாழ்த்துகள்.

சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் சென்னை வளர்ச்சி மையத்தின் பேராசிரியரான கலையரசனை புதன்கிழமை அதிகாலை சீருடை இல்லாத காவல்துறையினர் கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாவரம் தவெக எம்.எல்.ஏ. காமாட்சி குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதற்காக கைது செய்யப்படுவதாக காவல்துறையினர் விளக்கம் அளித்த நிலையில், அந்த கணக்கு தன்னுடையது இல்லை என்று கலையரசன் விளக்கம் அளித்தார்.

இதன்பின்னர், நேற்று காலை 8 மணியளவில் கலையரசனை அவரது வீட்டில் காவல்துறையினர் இறக்கிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, தனக்கு தொடர்பில்லாத வழக்கில் அதிகாலையில் சீருடையில் இல்லாத காவலர்கள் தன்னை கைது செய்து துன்புறுத்தியதாக ஆன்லைன் வழியாக டிஜிபி-யிடம் கலையரசன் புகார் அளித்தார்.

இதனிடையே, கலையரசனை தலைமைச் செயலகத்துக்கு அழைத்த முதல்வர் விஜய், சம்பவம் குறித்து கலையரசனிடம் வருத்தமும் தெரிவித்தார்.

Summary

MK Stalin urges action against officials who overstepped their bounds in the case of Professor Kalaiyarasan’s arrest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.