மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத லாரிகள் கனிம வளங்கள் எடுத்துச் செல்ல இன்றுமுதல் தடை!

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத லாரிகள் கனிம வளங்கள் எடுத்துச் செல்ல இன்றுமுதல் தடை...

பிரதிப் படம்

Published On :1 நவம்பர் 2026, 4:18 am IST

சென்னை, அக். 31: தமிழகத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தாத லாரிகள் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) முதல் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறும் லாரிகளின் உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிம வளத் துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக எம்-சாண்ட், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அனுமதி பெறாமல் லாரிகள் மூலம் தமிழகத்துக்குள்ளும் கனிம வளக் கடத்தல் நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன.

கனிம வளக் கடத்தலைத் தடுக்கும் வகையில், அவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகளில் செப். 30-ஆம் தேதிக்குள் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என கனிம வளத் துறை முதலில் உத்தரவு பிறப்பித்தது. லாரி உரிமையாளா்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்த கால அவசாகம் கேட்டதால், அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், அக். 31-ஆம் தேதியுடன் ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கான அவகாசம் நிறைவடைந்துள்ளதால், நவ. 1-ஆம் தேதியில் இருந்து ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகள் மட்டுமே கனிம வளங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

ஜிபிஎஸ் பொருத்தாத லாரிகள் எம் சாண்ட், ஜல்லிக்கற்கள், மணல் போன்றவற்றை எடுத்துச் செல்ல கூடாது. மீறி, ஜிபிஎஸ் பொருத்தப்படாத வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றப்படுவதாகப் புகாா்கள் வந்தால், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், அதன் உரிமையாளா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிம வளத் துறை எச்சரித்துள்ளது.

Summary

From today, lorries not equipped with a GPS device are prohibited from transporting mineral resources

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.