மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு நாளை முதல் தடை

தமிழகத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு இன்றுமுதல் தடை விதிக்கப்படுவது குறித்து...

பிரதிப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 3:32 pm IST

தமிழகத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. அதுமட்டுமின்றி, அனுமதி இல்லாத லாரிகளால் மாநிலத்துக்குள்ளேயும் கனிம வளங்கள் சுரண்டப்படுவதாகவும் புகார்கள் தெரிவித்தன.

இதனையடுத்து, தமிழகத்தில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் செப். 30-க்குள் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இல்லையெனில், ஜிபிஎஸ் பொருத்தப்படாத லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் பொருத்த செப்டம்பர் மாதம் வரையில் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் (அக். 31) நிறைவடைகிறது.

ஆகையால், மாநிலத்தில் நாளை முதல் (நவ. 1) ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகள் மட்டுமே கனிம வளங்களை ஏற்றிச் செல்ல முடியும். ஜிபிஎஸ் பொருத்தாத வாகனங்களில் உடனடியாக பொருத்தப்பட வேண்டும். இல்லையெனில், அவர்களால் கருங்கற்கள், எம் சாண்ட், மணல் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாது. மேலும், அவர்களுடைய அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்படும்.

இதனையும் மீறி, ஜிபிஎஸ் பொருத்தப்படாத வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றப்படுவதாகப் புகார்கள் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

Summary

Ban on mineral-transporting lorries without GPS devices, effective from tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.