கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மது போதையில் மகன் வெறிச்செயல்: தாய் அடித்துக் கொலை

தருமபுரியில் மது போதையில் மகன், தாயை அடித்துக் கொலை செய்த சம்பவம் குறித்து...

Son’s violent act while intoxicated...

மது போதையில் மகன் வெறிச்செயல்: தாய் அடித்துக் கொலை - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 10:19 am IST

தருமபுரி: தருமபுரியில் மது போதையில் மகன், தாயை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம், பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தன்(50). கட்டட மேஸ்திரி. இவரது மனைவி சின்னபாப்பா (45). இவர்களது மகன் தேவராஜ் (19). சிறுவயதிலேயே மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையான தேவராஜ், அண்மையில் சில குற்ற வழக்குகள் தொடர்பாக கைதாகி பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு போதையில் வீட்டுக்கு வந்த அவர் தனது தாயாரிடம் தகராறு செய்துள்ளார். செலவுக்கு பணம் கேட்டு தாயார் தரவில்லை என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், போதை வெறியில் ஆத்திரம் தலைக்கேறிய தேவராஜ் இரும்பு பட்டையை எடுத்து தாயாரை சரமாரியாக தாக்கியும் குத்தியும் தாக்கியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், சென்று பார்த்தபோது சின்ன பாப்பா இறந்து கிடந்துள்ளார். அருகில் பட்டை கம்பியுடன் நின்றுள்ளார் தேவராஜ்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த இண்டூர் காவல் நிலைய போலீசார், சின்னபாப்பா உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து, தேவராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்ற தாயை மது போதை வெறியில் மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Son’s violent act while intoxicated: Mother beaten to death

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.