கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!

புழல் சிறையில் இரண்டாவது முறையாக அன்பில் மகேஸை உதயநிதி சந்தித்தது பற்றி...

puzhal udhayanidhi

புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த உதயநிதி (கோப்புப்படம்) - X

Published On :29 அக்டோபர் 2026, 12:15 pm IST

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் சந்தித்துப் பேசினார்.

திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர்.

சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு திங்கள்கிழமை இரவு ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஸை நவ. 6 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அன்பில் மகேஸை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்று காலை புழல் சிறைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை இன்று விசாரித்த நீதிபதி, காவல்துறை தரப்பில் பதிலளிக்கக் கோரி விசாரணையை நவ. 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Summary

Udhayanidhi come to Puzhal Prison to meet Anbil Mahesh!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.