தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த உதயநிதி!

புழல் சிறையில் அன்பில் மகேஸை உதயநிதி சந்தித்தது பற்றி...

puzhal udhayanidhi

புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த உதயநிதி - X

Published On :27 அக்டோபர் 2026, 1:06 pm IST

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.

திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது நடவடிக்கைகளை தவிர்க்க முன்பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு நேற்று (அக். 26) காலை தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் அன்பில் மகேஸை கைது செய்த காவல்துறையினர், சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் இரவில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

நவ. 6 வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அன்பில் மகேஸை நேற்று நள்ளிரவு புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், புழல் சிறைக்கு நேரில் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸை நேரில் சந்தித்து பேசினார். உடன், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

முன்னதாக அன்பில் மகேஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Summary

Udhayanidhi met Anbil Mahesh at Puzhal Prison!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.