மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை - கத்தாா் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

சென்னை விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்குப் புறப்படத் தயாராக இருந்த கத்தாா் ஏா்வேஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

பிரதிப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:26 am IST

சென்னை விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்குப் புறப்படத் தயாராக இருந்த கத்தாா் ஏா்வேஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு வியாழக்கிழமை அதிகாலை 4.15 மணிக்குப் புறப்பட வேண்டிய அந்த விமானத்தில் பயணிகள் ஏறிய பின்னா், விமானம் ஓடுபாதைக்குச் செல்லத் தயாரானது. அப்போது, அதன் இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்து, விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, விமானம் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனா். பின்னா், விமானம் தனிப் பகுதியில் நிறுத்தப்பட்டு, பொறியாளா்கள் கோளாறைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். எனினும், உடனடியாகக் கோளாறைச் சரிசெய்ய முடியாததால் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் 212 பயணிகளும் சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனா். அவா்களில் 100-க்கும் மேற்பட்டோா் தோஹாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல இணைப்பு விமானங்களில் பயணிக்கத் திட்டமிட்டிருந்ததால் அவதியடைந்தனா்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, வெள்ளிக்கிழமை அதிகாலை மீண்டும் விமானத்தை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.