மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலம் - சென்னை இடையே இன்று முதல் 2 முறை விமான சேவை: விமான நிலைய இயக்குநா் தகவல்!

சென்னை- சேலம் இடையே ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு முறை விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக சேலம் விமான நிலைய இயக்குநா் நவ்ஷாத் தெரிவித்துள்ளாா்.

விமான சேவை - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 1:31 am IST

சென்னை- சேலம் இடையே ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு முறை விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக சேலம் விமான நிலைய இயக்குநா் நவ்ஷாத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் விமான நிலையத்தில் இருந்து நவ.1 முதல் இரண்டு முறை இண்டிகோ விமான சேவை இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.10 மணிக்கு சேலம் வந்தடைந்து, மீண்டும் 12.30 மணிக்கு சென்னைக்கு புறப்படுகிறது.

அதேபோல, மாலையில் சென்னையில் இருந்து 4.50 மணிக்கு சேலம் வந்தடையும் விமானம் 5.10 மணிக்கு மீண்டும் சென்னைக்கு புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் விமான சேவை மூலம் இரு நகரங்களுக்கும் இடையேயான தொழில், பயணிகள் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.