தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சைகை மொழியில் கோரிக்கை.. ஒரே நாளில் பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

வேலைவாய்ப்பு கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு ஒரே நாளில் முதல்வர் விஜய் பணி நியமன ஆணை வழங்கியதைப் பற்றி...

முதல்வர் விஜய்யுடன் மாற்றுத்திறனாளி மாணவர் தினேஷ்.

Published On :29 அக்டோபர் 2026, 2:58 pm IST

வேலைவாய்ப்பு கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு முதல்வர் விஜய் ஒரே நாளில் பணி நியமன ஆணை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், தொழில்துறைக்கான நவீன மின் ஆய்வகங்களை முதல்வர் விஜய், புதன்கிழமை திறந்துவைத்தார்.

மாணவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய் அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அப்போது மாற்றுத்திறனாளி இளைஞரான வீ. தினேஷ் வேலைவாய்ப்பு கோரி முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார்.

மாற்றுத்திறனாளி மாணவர் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் விஜய், அந்த மனுவை தனது கோட் பாக்கெட்டில் பத்திரமாக வைத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

முதல்வர் விஜய்யிடம் தனது கோரிக்கை மனுவை நேரில் வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவரான தினேஷ், தன்னால் பேச முடியாது என்று சைகை மொழியில் கூறினார். இதனை புரிந்துக்கொண்ட முதல்வர் விஜய் உடனடியாக அந்த மனுவை கனிவுடன் பெற்று நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை வைத்த கோரிக்கைக்கு உடனே நடவடிக்கை எடுத்துள்ள முதல்வர் விஜய், அந்த மனுவை பரிசீலனை செய்து, இன்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் பணிக்கான ஆணையை வழங்கியுள்ளார்.

மாற்றுத்திறனாளி மாணவர் தினேஷின் கோரிக்கைக்கு முதல்வர் விஜய் ஒரே நாளில் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

Summary

Chief Minister Vijay surprised a differently-abled student, who had submitted a petition seeking employment, by issuing an appointment order on the very same day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.