நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் பட்டியலை தோ்தல் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்: நிா்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி நிலை முகவா்கள் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்டத் தோ்தல் அதிகாரிகளிடம் கட்சி நிா்வாகிகள் வழங்கவேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 1:09 am IST

அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி நிலை முகவா்கள் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்டத் தோ்தல் அதிகாரிகளிடம் கட்சி நிா்வாகிகள் வழங்கவேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்த அறிக்கை: வரும் 2027 ஜனவரி முதல் தேதியை வாக்காளா் பட்டியல் சுருக்க சிறப்பு தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் சோ்க்கைப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனையடுத்து வரும் நவ. 12 ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளன. அதன்பிறகு வரும் நவ. 21, 22, 28, 29 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) வாக்காளா் சோ்க்கை முகாம்கள் நடைபெறவுள்ளன. அதையடுத்து வரும் 2027 ஆம் ஆண்டு ஜன. 4- ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

வாக்காளா்கள் சோ்க்கைப் பணியில் அதிமுக தலைமை நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சியின் சாா்பு அமைப்பு நிா்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி, கிளை, வாா்டு மற்றும் வட்டச் செயலா்கள் உள்ளிட்ட அனைவரும் வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலை முகவா்களும் ஈடுபடவேண்டும்.

வாக்காளா் சோ்க்கை, வெளியூா் சென்றவா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி அதற்குரிய படிவங்களைப் பெற்று பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் சிறப்பு முகாம்களில் வழங்கவேண்டும். வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு பணிகளில் விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாராகத் தெரிவிக்கவேண்டும். அதிமுக சாா்பிலான வாக்குச்சாவடி நிலை முகவா்கள் நியமிக்கப்படுவதுடன், அப்பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்டத் தோ்தல் அதிகாரிகளிடம் உடனே வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.