மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பஞ்ச் டயலாக் பேச மட்டுமே முதல்வர் வாய் திறக்கிறார்! எதற்கும் விளக்கமில்லை! கனிமொழி

தவெக ஆட்சியில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கடும் கண்டனம்...

Kanimozhi

கனிமொழி - ANI

Published On :28 அக்டோபர் 2026, 12:21 pm IST

கைதிகள் தப்பியோட்டம், ஆவின் பொருள் விலை உயர்வு, எதிர்க்கட்சியினர் கைது உள்ளிட்டவை குறித்து தவெக அரசு மீது திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"ஒரே நாளில் 17 கைதிகள் தப்பித்துச் செல்லக்கூடிய ஒரு அவலமான சூழ்நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது காவல்துறை, ஆளும் கட்சிக்கு குரல் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள் சொல்ல வேண்டிய பதிலை காவல்துறையினர் சொல்கிறார்கள்.

விலைவாசி உயர்வு இருக்கும் நிலையில் ஆவின் பொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். ஆட்சிக்கு நேரடியாக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய எதுவுமே இந்த ஆட்சியில் கட்டுப்பாட்டில் இல்லை.

திமுக ஆட்சியில் நிறைவடைந்த திட்டங்களைத் திறந்து வைத்துவிட்டு, நான்கு மாதங்களில் செய்து முடித்ததாக தவெக அரசு ரீல்ஸ் வெளியிடுகிறது.

தவெகவின் ஐடி விங் -காக காவல்துறை செயல்படுகிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 50 பேர் வரையில் கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளனர். எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதில் இருக்கும் ஆர்வம், குற்றம் செய்பவர்களை கைது செய்வதில் இல்லை.

பஞ்ச் டயலாக் பேச மட்டுமே முதல்வர் வாய் திறக்கிறார். சட்டப்பேரவை உள்ளிட்ட மற்ற நேரங்களில் எதற்கும் விளக்கம் தருவதில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திக்காத முதல்வர்" என்று பேசினார்.

Summary

CM vijay opens his mouth only to deliver punch dialogues: Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.