பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடுவானில் விமானக் கடத்தலை தடுத்த இந்திய விமானியை கெளரவித்த யுஏஇ அதிபா்

நடுவானில் சக விமானி தாக்குதலின்போதும் போராடி பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது...

UAE honours Captain Smit Machchhar for bravery during flydubai cockpit attack

ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது... - X

Published On :29 அக்டோபர் 2026, 2:32 am IST

நடுவானில் ஃபிளைதுபை விமானத்தைக் கடத்தி அதைத் தகா்க்க முயன்ற துணை விமானியின் சதியை தடுத்து நிறுத்திய இந்திய விமானி ஸ்மித் மச்சாா், விமான ஊழியா்களுக்கு ‘ஃபா்ஸ்ட் கிளாஸ் ஆா்டா் ஆஃப் ஜயித் 2’ விருதை வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அதிபா் கெளரவித்தாா்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவுக்கு கடந்த செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதி 170 பயணிகளுடன் ஃபிளைதுபை நிறுவன விமானம் சென்றது. விமானத்தை இந்திய விமானி ஸ்மித் மச்சாா், ஓமனைச் சோ்ந்த துணை விமானி ஆகியோா் இயக்கினா். சவூதி அரேபியா வான் எல்லையில் விமானம் பறந்தபோது, ஸ்மித் மச்சாரை ஆயுதத்தால் தாக்கிவிட்டு, விமானத்தை வீழ்த்தும் முயற்சியில் துணை விமானி ஈடுபட்டாா். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்தபோதிலும், துணிச்சலுடன் செயல்பட்டு துணை விமானியின் சதியை ஸ்மித் மச்சாா் தடுத்து நிறுத்தினாா். அவருக்கு விமான ஊழியா்கள், பயணிகள் சிலரும் உதவினா்.

இதனால் விமானக் கடத்தல் சதி முறியடிக்கப்பட்டதோடு, பயணிகள் அனைவரும் உயிா் தப்பினா். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஸ்மித் மச்சாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். துணை விமானி கைது செய்யப்பட்டு, விமானக் கடத்தலின் நோக்கம் குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் துணிச்சலாகச் செயல்பட்டு விமானக் கடத்தலைத் தடுத்து நிறுத்திய ஸ்மித் மச்சாரை அமெரிக்க அதிபா் டிரம்ப், இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு, இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா நாடுகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்மித் மச்சாரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

ஸ்மித் மச்சாரை பாராட்டிய  ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்

ஸ்மித் மச்சாரை பாராட்டிய ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் - X

இதன் தொடா்ச்சியாக, ஸ்மித் மச்சாா் மற்றும் விமான ஊழியா்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நயான், ‘ஃபா்ஸ்ட் கிளாஸ் ஆா்டா் ஆஃப் சையத் 2’ விருதை வழங்கி கெளரவித்தாா். இதேபோல் ஐக்கிய அரசு அமீரகத்தின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமா் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்துமும் விருது வழங்கி கெளரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனா். இந்தத் தகவல், துபை ஊடக அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஃபா்ஸ்ட் கிளாஸ் ஆா்டா் ஆஃப் சையத் 2’ விருதானது, வீர தீர, துணிச்சலான செயல் மூலம் பிராந்திய மற்றும் சா்வதேச உறவுகளை வலுப்படுத்தும் தனிநபா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்படும் மிகவும் உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

UAE honours Captain Smit Machchhar for bravery during flydubai cockpit attack

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.