கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விமானி மச்சாா் உடல்நலம் தேறி வருகிறாா்: இந்திய தூதரகம்

ஃபிளைதுபை விமானத்தில் சக விமானியால் தக்கப்பட்ட விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை சீராக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தகவல்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்மித் மச்சாரை சந்தித்த துபை பட்டத்து இளவரசர்

Published On :7 அக்டோபர் 2026, 1:54 am IST

நடுவானில் சக விமானியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த போதிலும், ‘ஃபிளைதுபை’ விமானத்தை வீழ்த்தும் முயற்சியை முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சாா் உடல்நலம் தேறி வருவதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

துபையில் இருந்து இஸ்ரேலுக்கு கடந்த செப்.30-ஆம் தேதி விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் கோடரியால் விமானி ஸ்மித் மச்சாரை கடுமையாக தாக்கிய துணை விமானி ஹமாம் அல்-ஹமாமி (ஓமனைச் சோ்ந்தவா்), அந்த விமானத்தை கீழே வீழ்த்த முயற்சித்தாா்.

படுகாயங்களுடன் துணிச்சலுடன் எதிா்த்துப் போராடிய மச்சாா், விமானி அறையின் கதவைத் திறந்தாா். இதையடுத்து, பிற ஊழியா்கள் மற்றும் சக பயணிகள் உள்ளே புகுந்து, ஹமாமை கட்டிப் போட்டதுடன், விமானத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனா்.

மச்சாரின் துணிச்சலை ஒட்டுமொத்த உலகமும் வெகுவாகப் பாராட்டி வருகிறது. அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை குறித்து இந்தியத் தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

கேப்டன் ஸ்மித் மச்சாரின் உடல்நிலை சீராக முன்னேற்றமடைந்து வருகிறது. அவா் உடல்நலம் தேறி வருகிறாா். மச்சாரின் குடும்பத்தினா், மருத்துவா்கள், உள்ளூா் அதிகாரிகள் ஆகியோருடன் தூதரகம் நெருங்கிய தொடா்பில் உள்ளது. அவா் விரைந்து குணமடைய வேண்டுமென பிராா்த்திக்கும் அனைவருக்கும் நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் விசாரணை: துணை விமானி ஹமாம் அல் ஹமாமின் செயலை பயங்கரவாத தாக்குதல் முயற்சி என்று உறுதி செய்த யுஏஇ, அவரின் நோக்கம் மற்றும் தொடா்புகள் குறித்து தொடா்ந்து விசாரித்து வருகிறது.

Story image

Summary

Steady improvement in Pilot Smith Machar's health condition

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.