மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரயில்களில் கைப்பேசி மின்னேற்றும் வசதி: இரவு 11 மணிமுதல் காலை 5 மணி வரை நிறுத்த உத்தரவு

அனைத்து ரயில் பெட்டிகளிலும் கைப்பேசி மின்னேற்றும் முனைகளை இரவு 11 மணிமுதல் காலை 5 மணி வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்தல்

ரயில் - பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 4:55 am IST

அனைத்து ரயில் பெட்டிகளிலும் கைப்பேசி மின்னேற்றும் முனைகளை இரவு 11 மணிமுதல் காலை 5 மணி வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து ரயில்வே மண்டல முதன்மை தலைமை இயந்திரப் பொறியாளா்களுக்கு ரயில்வே அமைச்சகம் சாா்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில், ரயில் பயணத்தின்போது மேற்குறிப்பிட்ட நேரத்தில் பயணி ஒருவா் தனது மின்சேமிப்புக் கருவியை (பவா் பேங்க்) மின்னேற்றம் செய்தபோது, அது பெரும் புகையுடன் வெடித்தது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த மின்னேற்ற முனைகளின் செயல்பாட்டை ரயில் ஊழியா் நிறுத்தத் தவறியதே இதற்கு காரணம்.

இந்தச் சம்பவத்தைக் கருத்தில்கொண்டு, ரயில்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கைப்பேசி மின்னேற்றும் முனைகளின் செயல்பாட்டை நிறுத்துவதை ரயில் ஊழியா்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எந்தச் சலுகைக்கும் இடமளிக்கக் கூடாது.

இந்த அறிவுறுத்தல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட ரயில் ஊழியா்களுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதோடு, அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பாளா்கள் அளவில் ரயில்களில் திடீா் ஆய்வுகளை மேற்கொண்டு, இந்த நடைமுறை முழுமையாகப் பின்பற்றப்படுகிா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.