மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் இரவு 10 மணி வரை மூடல்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் (சிஜேபி) போராட்டம் காரணமாக தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் இரவு 10 மணி வரை மூடப்பட்டிருப்பது பற்றி....

Delhi Metro extends closure of 45 stations till 10 pm amid protest

தில்லி மெட்ரோ.

Published On :10 அக்டோபர் 2026, 7:37 pm IST

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் (சிஜேபி) போராட்டம் காரணமாக தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் இரவு 10 மணி வரை மூடப்படுவதாக தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

முன்னதாக மாலை 6 மணிக்குத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த ரயில் நிலையங்கள், சனிக்கிழமை இரவு 10 மணி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று டி. எம். ஆா். சி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. தில்லி காவல்துறையின் கோரிக்கையை ஏற்று, வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் இந்தக் கட்டுப்பாடுகள் முதன்முதலில் அமல்படுத்தப்பட்டன.

ஆரம்பத்தில் 57 மெட்ரோ நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது 45 நிலையங்களாகக் குறைக்கப்பட்டது. புதுதில்லி மெட்ரோ ரயில் நிலையத்தைத் தவிர, பாதிக்கப்பட்ட மற்ற அனைத்து நிலையங்களிலும் பயணிகள் ரயில் மாறும் வசதி வழக்கம் போலச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) நடைமுறையில் முறைகேடு செய்ததாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி சிஜேபி கட்சி இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Delhi Metro Rail Corporation (DMRC) on Saturday extended the closure of entry and exit gates at 45 metro stations by four hours till 10 pm amid security arrangements for the CJP protest in the national capital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.