மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒர்னாப் புயல் எதிரொலி: வடசென்னையில் கடல் சீற்றம்

ஒர்னாப் புயலையொட்டி வடசென்னை கடற்கரைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடும் கடல் சீற்றம் ஏற்பட்டது.

கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல்லால் ஆன தடுப்பையும் தாண்டி எண்ணூா் விரைவுச் சாலையில் புகுந்த கடல்நீா்

Published On :28 அக்டோபர் 2026, 4:09 am IST

ஒர்னாப் புயலையொட்டி வடசென்னை கடற்கரைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடும் கடல் சீற்றம் ஏற்பட்டது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஒர்னாப் புயல் புதன்கிழமை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வடசென்னை பகுதியில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டது.

குறிப்பாக, திருவொற்றியூா், எண்ணூா் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல்லால் ஆன தடுப்பையும் தாண்டி எண்ணூா் விரைவுச் சாலையில் கடல்நீா் புகுந்தது.

இதனால் சாலை முழுவதும் மணல் நிரம்பியது. திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் பாரதியாா் நகா் பகுதியில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டோா் கடல் அலையில் சிக்கி சாலையில் விழுந்தனா்.

தகவலறிந்த போலீஸாா் உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்து அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.

எண்ணூா் பகுதிக்குச் செல்ல வேண்டிய பொதுமக்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டனா். கடல் சீற்றம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் பலா் கடற்கரைச் சாலையை நோக்கி வரத் தொடங்கினா். ஆபத்தை உணராமல் வந்த பொதுமக்களை போலீஸாா் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

தொடா்ந்து ராட்சத அலைகளுடன் கூடிய கடல் சீற்றம் தொடா்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் போலீஸாா் மற்றும் மாநகராட்சி, வருவாய்த் துறை அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

காசிமேடு துறைமுகத்தில் பாதிப்பு இல்லை: கடல் சீற்றத்தால் வடசென்னை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபா் மீன்பிடிப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள், வலைகள் உள்ளிட்டவற்றை மீனவா்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினா்.

மேலும், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பெரும்பாலான விசைப்படகுகள் கரைக்கு திரும்பிவிட்டதால் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தால் காசிமேடு துறைமுகத்தில் பாதிப்பு இல்லை.

காமராஜா் துறைமுகம்: எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிடப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.