மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை உயர்நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்து விபத்து!

சென்னை உயர்நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்து...

Government bus accident near the Madras High Court

சாலைத் தடுப்பில் மோதி நின்ற அரசுப் பேருந்து... - X

Published On :27 அக்டோபர் 2026, 2:20 pm IST

சென்னை உயர்நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்து ஒன்று திடீரென பிரேக் பழுதடைந்து கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

செங்கல்பட்டு மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து சென்னை தீவுத்திடல் நோக்கி மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து வந்து கொண்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் அருகே வந்தபோது, பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து என்.எஸ்.சி. போஸ் சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Story image

இதில், பத்துக்கும் மேற்பட்ட கார்கள் பலத்த சேதமடைந்தன. கார்கள் மீது மோதிய வேகத்தில் பேருந்து, சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் மீது ஏறி நின்றது.

இந்த விபத்து காரணமாக என்.எஸ்.சி. போஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக போர் நினைவுச் சின்னம் அருகே தடுப்புகளை அமைத்து, போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

மேலும்,பேருந்து ஓட்டுநர் ராமமூர்த்தி, நடத்துநர் தேவராஜ் ஆகியோரிடம் விபத்து குறித்து வடக்கு கடற்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை உயர்நீதிமன்ற பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Story image

Summary

Government bus accident near the Madras High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.