மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

TN Cabinet

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது - கோப்புப்படம்

Published On :27 அக்டோபர் 2026, 9:55 am IST

முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வெற்றி பெற்ற பின்னர் பல்வேறு நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம், ஜூன் 5 ஆம் தேதியும், அதைத்தொடர்ந்து நிதி நிலை அறிக்கைக்கு முன்னதாக ஜூலை 16 ஆம் தேதியும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற அக். 29 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கனமழையால் ஏற்பட்டுள்ள தற்போதைய பாதிப்புகள், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சர்களிடம் முதல்வர் விஜய் கேட்டறியவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு, அமைச்சரவை மாற்றம் அல்லது மாநிலத்தில் முக்கிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

It has been announced that a cabinet meeting will be held the day after tomorrow, chaired by Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.