தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! 6 முக்கிய முடிவுகள்?

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது பற்றி...

CM Vijay

முதல்வர் விஜய் - ANI

Published On :29 அக்டோபர் 2026, 10:55 am IST

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடா்பான முன்மொழிவுகள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மின்தடை விவகாரம் பெரிதாக உள்ளதால் பேட்டரி எரிசக்தி சேமிப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் முக்கிய முடிவுகள், அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தோ்தல் வாக்குறுதிகள் மற்றும் துறைவாரியான இலக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் தொடா்பாகவும் வருவாய்த் துறை சார்பாக ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது, சமூக நீதி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்தும் பேசப்படும் என்று தெரிகிறது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3-வது அமைச்சரவை கூட்டம்

முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்ற பிறகு தோ்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட மொத்தம் 436 திட்டங்கள் பல்வேறு துறைகள் சாா்பில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன. அதன்பிறகு ஜூலை 16-ஆம் தேதி 2-ஆவது அமைச்சரவைக் கூட்டம் பட்ஜெட் கூட்டத் தொடா் தொடா்பாக நடைபெற்றது. முதல்வா் விஜய்யின் லண்டன் பயணத்துக்குப் பிறகு இப்போது 3 ஆவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Summary

TN cabinet meeting begins under the leadership of Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.