எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குழந்தைகளுக்கே பெயர் வைத்து விடலாம்! புயல்களுக்கு பெயர் வைப்பதில் இத்தனை விதிமுறைகளா?

குழந்தைகளுக்கே பெயர் வைத்து விடலாம் ஆனால் புயல்களுக்கு பெயர் வைப்பதில் இத்தனை விதிமுறைகளா?

Andhra begins evacuation, shuts beaches as ‘Arnab’ intensifies into severe cyclone (Photo: IANS)

புயல்களுக்கு பெயர் வைப்பதில் விதிமுறைகள் - IANS

Published On :27 அக்டோபர் 2026, 1:15 pm IST

ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவானால், அவற்றைப் பற்றி அறிவுறுத்தல்களை வெளியிட எளிதாக இருக்க வேண்டும் என்பதால் புயல்களுக்குப் பெயர் வைக்கும் முறை வந்தது. ஆனால், இந்த பெயர்ப் பட்டியலில் இடம்பெறும் பெயர்களை பரிந்துரைக்கவென சில அல்ல பல விதிமுறைகள் உள்ளனவாம்.

புயல்கள் உருவாகும்போது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எச்சரிக்கைகளை வெளியிடவும் எளிதாக இருக்க புயல்களுக்கு பெயரிடும் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், இதில் கவனிக்கத் தக்க விவகாரமே சாதாரணமாக பெயர்களை பரிந்துரைக்க முடியாதாம். அதற்கென சில விதிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டியது உள்ளதாம்.

என்ன பெயரை வேண்டுமானாலும் பரிந்துரைத்துவிடலாம் என்று நினைக்கக் கூடாது.

அதற்கென உள்ள விதிமுறைகள்

தொழில்நுட்பச் சொற்கள் மற்றும் எண்களைப் போல் இருக்கக் கூடாது.

மக்கள் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அடையாளம் இருக்க வேண்டும்.

புயல்களுக்குப் பெயரிடும்போது நாடுகள் பல அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அப்பெயர்கள் அரசியல் மற்றும் கலாசார சார்பற்றவையாக இருக்க வேண்டும்.

எந்த ஒரு தனி மனிதரின் பெயராகவும் இருக்கக் கூடாது, அதாவது, வாழும், வாழ்ந்த நபர்களின் பெயர்கள் சூட்டப்படுவதில்லை.

யாரையும் புண்படுத்தும் வகையில் பெயர்கள் இருக்கக் கூடாது.

அதுபோல கலாசார உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, முரட்டுத்தனமான, கொடூரமான, அவமதிக்கும் வகையிலான பெயர்களாக இருக்கக்கூடாது.

எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எளிதில் உச்சரிக்கக்கூடிய பெயர்களாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பெயரும் எட்டு எழுத்துக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஒருமுறை சூட்டியப் பெயரை மீண்டும் சூட்ட முடியாது.

சில முக்கிய கூட்டுப் பெயர்கள் சூட்டப்படக் கூடாது என்று நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளுக்கு உள்பட்டே பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, புயல்களுக்கு சூட்டப்பட்டு வருகின்றனவாம்.

Summary

We name our children — but are there actually such specific rules for naming cyclones?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.