மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அன்பில் மகேஸுக்கு மருத்துவப் பரிசோதனை

விசாரணைக்குப் பிரகு அன்பில் மகேஸுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறித்து...

Anbil Mahesh

அன்பில் மகேஸ் - எக்ஸ்

Published On :26 அக்டோபர் 2026, 9:16 pm IST

பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு பலத்த பாதுகாப்புடன் காவல் துறையினர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். அரை மணிநேரத்துக்கும் மேல் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ. 100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள இல்லத்தில் அன்பில் மகேஸை காவல் துறையினர் இன்று மாலை கைது செய்தனர்.

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 3 மணிநேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

மருத்துவப் பரிசோதனையைத் தொடர்ந்து நீதிபதிகள் குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Summary

Medical examination for Anbil Mahesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.