மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இளையான்குடியில்109 மி.மீ. மழை பதிவு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 109 மி.மீ. மழை பதிவானது குறித்து...

109 mm of rainfall recorded in Ilaiyankudi

இளையான்குடியில்109 மி.மீ. மழை பதிவு - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 9:21 am IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 109 மி.மீ. மழை பதிவானது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ள நிலையிலும், அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையாலும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், பிற்பகல் முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது. இதில், இளையான்குடியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 109 மி.மீ. மழை பதிவானது.

இதுகுறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை, மாவட்ட அவசரக் கால செயல்பாட்டு மையம் வெளியிட்ட அதிகாரபூர்வ மழை பதிவு விவரம் (மிமீ):

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இளையான்குடி பகுதியில் அதிகபட்சமாக 109 மி.மீ. மழை பதிவானது. காளையார் கோவிலில் 94.60, மானாமதுரையில் 80, சிவகங்கையில் 70.60, சிங்கம்புணரியில் 29.40, திருப்பத்தூரில் 25, திருப்புவனத்தில் 23.20, காரைக்குடியில் 11, தேவகோட்டையில் 7.20 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்த மழை அளவு 450 மிமீ பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவு 50 மிமீ ஆகும்.

இந்த மழைப்பொழிவின் காரணமாக மாவட்டத்தில் மனித இழப்போ அல்லது காயங்களோ ஏதும் ஏற்படவில்லை. மேலும், பசு, எருமை, ஆடு, மாடு, கன்று, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.