தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 3 மணி நேரங்களாக நகராமல் நீடிக்கிறது...

Weather alert

வானிலை அறிவிப்பு

Published On :25 அக்டோபர் 2026, 3:09 pm IST

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 3 மணி நேரங்களாக நகராமல் ஒரே இடத்தில் நீடித்து வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முன்னதாக மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது நகராமல் நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக். 26) அதி தீவிரமாக மாறி பிறகு புயலாக உருமாறும் என்றும் எச்சரித்துள்ளது. அதற்கு மறுநாள் (அக். 27) வடக்கு நோக்கி நகர்ந்து அதிதீவிர புயலாக மாறும் என்றும் மத்திய மேற்கு கடலில் அக். 28 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பதை குறிக்கும் வகையில் புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாகத் திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Red alert for 5 districts! Low pressure area that will persist

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.