தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வானிலை: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் அதிகபட்ச மழை!

தமிழ்நாட்டில் வட தமிழகத்தில் அதிகபட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது குறித்து...

Weather update

கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 2:30 pm IST

தமிழ்நாட்டில் காலை நிலவரப்படி வட தமிழகத்தில் அதிகபட்சமாக மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சியில் அதிகமாக மழை பொழிந்துள்ளது.

தமிழ்நாடு வானிலை ஆய்வு மையத் தரவுகளைத் திரட்டி அதிகபட்ச மழைப்பொழிவு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளதாவது:

வடதமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்கு நேற்றைய தினம் சிறந்ததாக அமைந்திருந்தது. கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த பருவத்தின் சிறந்த நாள் அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

வானிலை ஆய்வு மையத் தரவுகளின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தின் தேவிகாபுரத்தில் 196.4 மி.மீ., நெடுங்குணம் 183.6மி.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ரிஷிவந்தியம் 168 மி.மீ., சேத்பட் 167 மி.மீ., கள்ளக்குறிச்சியின் முடியனூர் 158.8 மி.மீ., விழுப்புரம் மாவட்டத்தின் மேல்மலையனூர் 158.8 மி.மீ., பென்னாகரம் 155.6 மி.மீ., கள்ளக்குறிச்சியின் வனப்புரம் 154 மி.மீ., ஒகேனக்கல் 142.4 மி.மீ., பெரம்பலூர் மாவட்டத்தின் வேப்பந்தட்டை 142 மி.மீ., போளூர் 137.6 மி.மீ., விழுப்புரம் மாவட்டத்தின் சாதம்பாடி 134 மி.மீ., கெங்கவல்லி 127.2 மி.மீ., தலைவாசல் 126.8 மி.மீ., வேப்பூர் 12. மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டத்தின் அநேக இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழைப் பொழிவு பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Weather update Maximum rainfall in Tiruvannamalai and Kallakurichi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.