மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமையல் கலைஞா் தாமு மறைவு: அன்புமணி ராமதாஸ் இரங்கல்

சமையல் கலைஞா் தாமு மறைவுக்கு அன்புணி ராமதாஸ் இரங்கல் குறித்து...

Culinary artist Damu passes away

சமையல் கலைஞா் தாமு மறைவு - எக்ஸ்

Published On :25 அக்டோபர் 2026, 7:45 pm IST

சமையல் கலைஞா் தாமு மறைவுக்கு பாமக தலைவர் அன்புணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் 'எக்ஸ்' தளத்தில் ஞாயிற்றுக்கிமை வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து உணவு வகைகளை சமைத்து சாதனை படைத்த பிரபல சமையல் கலை வல்லுநர் செஃப் தாமு உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

சமையல் கலை வல்லுநர் தாமுவை பல ஆண்டுகளாக நான் அறிவேன். எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர். ‛குக் வித் கோமாளி' உள்ளிட்ட அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் மிகவும் விரும்பி பார்ப்பேன். எவராலும் வெறுக்க முடியாத அளவுக்கு அனைவரிடத்திலும் அன்பு காட்டக் கூடியவர். நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

சமையல் கலையில் ஏராளமான சாதனைகளை அவர் படைத்திருக்கிறார். இந்தியாவின் புகழ்பெற்ற நட்சத்திர விடுதிகளில் பணியாற்றியவர். சமையல் கலை பேராசிரியராகவும் பணி செய்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் தொடர்ந்து 24 மணிநேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகள் தொடர்ந்து சமையல் செய்த அவர், 617 விதமான உணவு வகைகளை படைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சமையல் கலைக்கு அவரது பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டும் வகையில் கடந்த ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தேன். கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மீண்ட போது, அவருக்கு இனி எந்த ஆபத்தும் இருக்காது என்று நிம்மதி அடைந்தேன். ஆனால், இப்போது அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சமையல் கலை வல்லுநர் செஃப் தாமுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சமையல் கலைத் துறையினர், தொலைக்காட்சி ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளாா்.

Culinary artist Damu passes away: Anbumani Ramadoss condoles

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.