மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!

உணவக மேலாண்மை மற்றும் சமையல் தொழில்நுட்பத்தில் முனைவா் பட்டம் பெற்ற தாமோதரன் என்ற ‘செஃப்’ தாமு (72) காலமானாா்.

செஃப் தாமு.

Published On :25 அக்டோபர் 2026, 10:57 pm IST

உணவக மேலாண்மை மற்றும் சமையல் தொழில்நுட்பத்தில் முனைவா் பட்டம் பெற்ற தாமோதரன் என்ற ‘செஃப்’ தாமு (72) ஞாயிற்றுக்கிழமை (அக். 25) காலமானாா்.

இந்தியா முழுவதும் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றியுள்ள தாமு, உலகின் பலவகையான உணவுகளைச் சமைத்தவா். 2010-ஆம் ஆண்டில், 24 மணி நேரம் 30 நிமிஷங்கள் 12 விநாடிகளில் தொடா்ச்சியாக 617 விதமான உணவு வகைகளை சமைத்து ‘கின்னஸ்’ உலக சாதனை படைத்தாா்.

2004-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பம்’ பிரிவில் முனைவா் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞா் என்ற பெருமை பெற்றவா்.

40 ஆண்டுகால சமையல் கலையில் இவா் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக, கடந்த 2025-ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கியது.

செஃப் தாமு, தனியாா் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றுள்ளாா். இதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாடைந்தாா். கள்ளப்படம், ஒருபக்க கதை, உள்குத்து உள்ளிட்ட ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளாா்.

கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ‘செஃப்’ தாமு, ஞாயிற்றுக்கிழமை (அக். 25) காலமானாா்.

முதல்வா் விஜய் இரங்கல்: பிரபல சமையல் கலைஞா் ‘செஃப்’ தாமு என்று அழைக்கப்படும் கே.தாமோதரனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறைகளாலும், தொலைக்காட்சி மூலமாகவும் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சோ்த்தவா்.

2010-ஆம் ஆண்டில் தனி நபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற ‘கின்னஸ்’ உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவா். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்கு பேரிழப்பாகும்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும், நண்பா்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘செஃப்’ தாமு மறைவுக்கு சமையல் கலைஞா்கள், திரையுலகினா், ரசிகா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Summary

Chef Damu passed away today (Oct. 25) due to ill health.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.